ஆட்டோ ஓட்டுநர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

ஆட்டோ ஓட்டுநர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. “ராயல் டிரைவர் ” என்பது கார்ட்லா சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (இனி ராயல் ஆட்டோ என்று குறிப்பிடப்படுகிறது ) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மற்றும் முழு உரிமையான ஆண்ட்ராய்டு செயலி ஆகும். இச்செயலி , ஆட்டோ ஓட்டுநரின் இருப்பிடம் (location) பற்றிய தகவலை பெற்று அதன் மூலம் அருகிலுள்ள வாடிக்கையாளர்கள் இச்செயலி மூலமோ அல்லது சேவையகம் மூலமோ ஓட்டுநரை தொடர்பு கொள்ள உதவுகிறது .

2. “ராயல் ஆட்டோ”வில் பதிவு செய்யும் பொழுது தேவைப்படும் அனைத்து விவரங்களையும் ஆட்டோ ஓட்டுநர் சரியாக வழங்க வேண்டும் மற்றும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் “ராயல் ஆட்டோ”வில் புதுபித்துக்கொள்ளவேண்டும்.

3. “ராயல் ஆட்டோ” சந்தாதாரரான ஆட்டோ ஓட்டுநர், தாங்கள் அளித்துள்ள கைபேசி எண், தங்களின் பெயரிலேயே பதிவாகியுள்ளது என்று சுய ஒப்புதல் அளிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

4. “ராயல் ஆட்டோ” தன்னிடம் உள்ள தகவல்கள் சரியானவை என்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எப்பொழுதும் எடுத்துக்கொண்டு இருக்க முயற்சிக்கும். இருப்பினும், “ராயல் ஆட்டோ”வில் வெளியிடப்படும் ஓட்டுநர் தகவல்களை சரி பார்ப்பது ஆட்டோ ஓட்டுனர்களின் பொறுப்பாகும். அவ்வாறு அளிக்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் உடனடியாக, எழுத்துபூர்வமாக “ராயல் ஆட்டோ”வில் தெரியப்படுத்த வேண்டியது அந்த ஆட்டோ ஓட்டுனரின் கடமையாகும்.
5. எந்த ஒரு ஆட்டோவையோ, ஆட்டோ ஓட்டுனரையோ எவ்வித காரணமும் இன்றி “ராயல் ஆட்டோ” மற்றும் அதனை சார்ந்த ஊடகங்களில் சேர்ப்பதற்கும் நீக்குவதற்குமான முழு உரிமையும் அதிகாரமும் “ராயல் ஆட்டோ”விற்கு மட்டுமே உள்ளது.
6. அரசாங்கத்தின் அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை (சாலை விதிகள் , RTO , கட்டண விதிகள் மற்றும் பல ) பின்பற்றுவது ஆட்டோ ஓட்டுனரின் பொறுப்பாகும் அதை கண்காணிப்பது “ராயல் ஆட்டோ”வின் பொறுப்பல்ல.
7. ஆட்டோ ஓட்டுநர், “ராயல் ஆட்டோ” அல்லது அதனுடன் தொடர்புடைய ஊடகங்களில் இருந்தோ அல்லது செயலியில் இருந்தோ அவரைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர்களிடமிருந்து அழைப்புகள் மற்றும் / அல்லது குறுந்செய்தி பெற ஒப்புக்கொள்கிறார்.
8. ராயல் ஆட்டோ, கூகிள் மேப்ஸில் இருந்து பெறப்பட்ட விவரங்களை கொண்டு ” மொத்த பயண தூரம் “, ” மதிப்பிடப்பட்ட பயண நேரம் ” மற்றும் ” தொடங்கும் இடம்” முதல் “சேரும் இடம்” வரை போன்ற தகவல்களை கொண்டு அதன் மதிப்பீடுகளை உருவாக்குகிறது . “கட்டணம்” மற்றும் “பயண நேரம் கட்டணம்” ஆகியவை மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் மற்றும் அரசாங்கம் பரிந்துரைக்கப்பட்ட விகிதங்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றன.

9. கட்டண நிர்ணயத்தில், ” ஓட்டுநர் வசதி கட்டணம் ” (Driver Convenience Charge” ஆனது ஆட்டோ டிரைவர் மூலம் ராயல் ஆட்டோ விற்கு மாதாந்திர சந்தா கட்டணமாக செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Idle ரன்னிங் / இரவு நேர கட்டணம் ஆகியவை ஆட்டோ ஓட்டுநரால் தான் இருக்கும் இடத்திலிருந்து வாடிக்கயாளர் ஏறும் இடத்திற்கும் இடையிலான தூரம் மற்றும் எந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ள படுகிறது போன்றவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆட்டோ டிரைவர் வாடிக்கையாளர்களிடமிருந்து மாதாந்திர சந்தா கட்டணத்திற்கான தொகையை வசூலித்த பின்பு அவர் ” ஓட்டுநர் வசதி கட்டணத்தை ” விட்டு கொடுத்து விடலாம் .

10. ஆட்டோ ஓட்டுநர் வழங்கிய சேவைக்கான கட்டணத்தை நிர்ணயிப்பாத்து முழுக்க ஆட்டோ ஓட்டுனரே ஆகும். “ராயல் ஆட்டோ” இந்த முடிவில் எவ்விதத்திலும் தலையிடாது.
11. ராயல் ஆட்டோ மூலம் அறியப்பட்ட வாடிக்கையாளர்களை கையாள்வதும் மற்றும் ராயல் ஆட்டோவின் ஆதரவை பயன்படுத்தி தம் வருமானத்தை பெருக்கி கொள்வதும் முற்றிலும் ஆட்டோ ஓட்டுனரின் பொறுப்பேயாகும். மேலும் அவர்களின் சேவைகளுக்கான எந்த வித குறைந்தபட்ச வருவாயையும் “ராயல் ஆட்டோ” உத்தரவாதம் கொடுக்கவில்லை .
12. ஆட்டோ ஓட்டுநர் ,“ராயல் ஆட்டோ”வின் சேவைகளான பட்டியலிடுதல், நேரடி தகவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை “ராயல் ஆட்டோ”விற்கு செலுத்த வேண்டும். எந்த நேரத்திலும் கட்டணத்தை மாற்றுவதற்கான உரிமை “ராயல் ஆட்டோ”விற்கு உள்ளது
13. “ராயல் ஆட்டோ”வின் சேவைகளைப் பெறுவதற்கு செலுத்தும் எந்த தொகையையும் “ராயல் ஆட்டோ” திருப்பியளிக்கப்படமாட்டாது.
14. “ராயல் ஆட்டோ”வின் சேவைகளைப் பெற, ஏதேனும் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சங்கத்துடன் தன்னை இணைத்துள்ளார் என்று ஓட்டுநர் ஒப்புக்கொள்கிறார்.
15. ஆட்டோ ஓட்டுநர் தான் இணைந்துள்ள ஆட்டோ சங்கத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டால், அவருக்கு அளிக்கப்பட்ட எந்தவொரு சேவையையும் அல்லது அனைத்துசேவைகளையும் மறுக்க “ராயல் ஆட்டோ”விற்கு உரிமை உண்டு.
16. “ராயல் ஆட்டோ”வின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களினால் “ராயல் ஆட்டோ” சேவைகளில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால், சேவை கட்டணங்கள் மற்றும் அந்த சமயத்தில் ஏற்படும் பிற கட்டணங்களை ஓட்டுநர் திரும்பப்பெற இயலாது.
17. “ராயல் ஆட்டோ”வின் சேவைகளைப் பயன்படுத்தி பெறப்பட்ட தொகைக்கு அரசு விதிகளின்படி, தேவை இருப்பின், ஜி.எஸ்.டி, வருமான வரி, பார்க்கிங் கட்டணங்கள், நுழைவு வரி, நெடுஞ்சாலை வரி போன்ற அனைத்து உள்ளூர் / மாநில / மத்திய வரி கட்டணங்களைச் செலுத்தும் பொறுப்பு ஆட்டோ ஒட்டுனருடையதாகும்.
18. ஆட்டோ ஓட்டுநர், தான் வழங்கிய எந்தவொரு சேவைக்கும் “ராயல் ஆட்டோ” வரி செலுத்த வேண்டியதில்லை என்று ஒப்புக்கொள்கிறார். “ராயல் ஆட்டோ”, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கிய சேவைகளுக்காக பெறப்பட்ட தொகைக்கு மட்டுமே தேவையான வரிகளை செலுத்தும்.
19. ஆட்டோ ஓட்டுநர், எப்போதும் தங்கள் சொந்த ஸ்மார்ட் போன் (மேம்பட்ட கைபேசி), இணைய இணைப்பு மற்றும் ஜி.பி.எஸ் மூலம் தங்கள் சொந்த செலவில் “ராயல் ஆட்டோ”வின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்.
20. ஆட்டோ ஓட்டுநர் தங்களை ராயல் ஆட்டோ சேவையகங்கள் அடையாளம்கண்டு கொள்ளவும் அதன் மூலம் சரியான வாடிக்கையாளர்கள் ஓட்டுனரை தொடர்புகொள்ளவும் எப்பொழுதும் தங்கள் செயலியினை திறந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வப்போது தங்கள் செயலினை சமீபத்திய பதிப்பிற்கு விரைவாக புதுப்பித்துவிட வேண்டும். இது தங்கள் செயலியின் உகந்த செயல் பாட்டை உறுதி செய்ய உதவும் .
21. ஆட்டோ ஓட்டுநர் தான் செலுத்த வேண்டிய சந்தா கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால், எவ்வித முன்னறிவிப்பின்றி ஓட்டுனருக்கு வழங்கப்பட்ட சேவைகளை துண்டிக்கும் உரிமை “ராயல் ஆட்டோ”விற்கு உள்ளது.
22. ஆட்டோ ஓட்டுநர், எப்போதும் மற்ற ஆட்டோ ஓட்டுனர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் “ராயல் ஆட்டோ”விடமும் நியாயமாக நடந்துகொள்வார் என்று ஒப்புக்கொள்கிறார்.
23. வாடிக்கையாளரின் அனுமதியின்றி – “ராயல் ஆட்டோ” சேவைகளால் இணைக்கப்படும் வாடிக்கையாளர் தொடர்பான பெயர், கைபேசி எண், போன்ற எந்த தகவலையும் ஆட்டோ ஓட்டுநர் சேகரிக்க மாட்டார் என்று ஒப்புக்கொள்கிறார்.
24. வாடிக்கையாளர் எந்தவொரு காரணத்திற்காகவும் ஆட்டோ ஓட்டுனரின் சேவையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ உரிமை உண்டு என்று ஆட்டோ ஓட்டுநர் ஒப்புக்கொள்கிறார்
25. வாடிக்கையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் அளித்துள்ள ஓட்டுநர் பற்றிய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை ஆட்டோ ஓட்டுநர், “ராயல் ஆட்டோ”வில் வெளியிடுவதற்கு ஒப்புக்கொள்கிறார்.
26. ஆட்டோ ஓட்டுநர், தாமாகவே முன்வந்து அவ்வப்பொழுது “ராயல் ஆட்டோ” தனது https://RoyalAuto.in/ptnc என்ற தளத்தில் வெளியிடும் சமீபத்திய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனித்து பின்பற்ற ஒப்புக்கொள்கிறார்.
27. ஆட்டோ ஓட்டுநர் பயன்படுத்தப்படும் வாகனத்தையோ, ஓட்டுநர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையினையோ “ராயல் ஆட்டோ” உரிமைகொள்ளவோ அல்லது கட்டுபடுத்தவோ செய்யாது என்பதை ஆட்டோ ஓட்டுநர் ஒப்புக்கொள்கிறார்.
28. ஆட்டோ ஓட்டுநர், “ராயல் ஆட்டோ” அல்லது ராயல் ஆட்டோவினால் பரிந்துரைக்கப்படும் படம் (லோகோ) மற்றும் / அல்லது ஸ்டிக்கர்களை அவர்களின் வாகனத்தில் ஒட்ட ஒப்புக்கொள்கிறார். மேலும் இவ்வித வர்த்தக மற்றும் சந்தைபடுத்தும் செயல்களுக்கு “ராயல் ஆட்டோ”விடமிருந்து எந்தத் தொகையையும் கோர உரிமை இல்லை என்றும் ஒப்புக்கொள்கிறார்.
29. ஆட்டோ ஓட்டுநர், தங்கள் தகவலை “ராயல் ஆட்டோ” அல்லது தொடர்புடைய வலைத்தளங்களில் இருந்து அகற்ற, அல்லது தனது “ராயல் ஆட்டோ” சேவையை ரத்து செய்ய விரும்பினாலோ அவரது கோரிக்கையை எழுத்துபூர்வமாக “ராயல் ஆட்டோ”விடம் அளிக்க வேண்டும்.
30. ராயல் ஆட்டோவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரும் பின்பற்றத் தவறினால், எவ்வித முன்னரிவிப்பின்றி அவருக்கு வழங்கப்பட்ட சேவைகளை துண்டிக்கும் உரிமை “ராயல் ஆட்டோ”விற்கு உள்ளது.